திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-05-24 15:25:06



திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் கடல் வளம் மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.20 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் ஆகும் செலவினத் தொகை ரூ.4 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.1.60 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.2.40 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.20 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7.50 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.00 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.50 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.3 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.1.20 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.1.80 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.நடுத்தரம் அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவினத்தொகை ரூ.8.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.20 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.80 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் அலகு அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.25 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.10 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.15.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.குளிரூட்டப்பட்ட வாகனம் வாங்க ஆகும் செலவினதொகை ரூ.20 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.8.00 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.12.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

உறைப்பதன சேமிப்பு அறை அமைத்திட ஆகும் செலவின தொகை ரூ.80 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.32.00 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்,மகளீர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.48.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.ஒரு ஹெக்டேர் புதிய உவர்நீர் இறால் பண்ணைகள் அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.8 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.20 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.80 இலட்சம் மானியமாகவும் மற்றும் ஒரு ஹெக்டேர் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு உள்ளீட்டு மானியம் ஆகும் செலவினதொகை ரூ.6 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.3.60 இலட்சம் மானியமாகவும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி அலுவலகம், எண்.05, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி மற்றும் தொலைபேசி எண்.044-27972457 அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.