திருவள்ளூர் - காக்களூர் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

பதிவு:2023-05-24 15:29:13



திருவள்ளூர் - காக்களூர் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

திருவள்ளூர் - காக்களூர் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு என ஏராளமானோர் வீடுகள் கட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் அகற்றப்பட்டது.

இதில் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் கே.செல்வகுமாரி,நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரசாந்த், சாலை ஆய்வாளர் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், காக்களூர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், கிராம உதவியாளர் ஜெய்சங்கர், மின்வாரிய உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.