திருவள்ளூரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க பாஜக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் :

பதிவு:2023-05-24 15:32:45



திருவள்ளூரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க பாஜக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் :

திருவள்ளூரில் போக்குவரத்து நெருக்கடியை  தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க பாஜக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் :

திருவள்ளூர் மே 24 : திருவள்ளூரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் விரைவில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் பா.ஜ.க மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளூர் அருகே காக்களூரில் தனியார் அரங்கத்தில் பா.ஜ.க மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சம்பத், சிந்தனையாளர் பிரிவு மாநில தலைவர் செல்வி தாமோதரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்தக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் சுப்பிரமணியம், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மதுசூதணன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், முராஜிதேசய், ரமேஷ், மாவட்ட மருத்துவ அணி பிரிவு தலைவர் லோகேஷ்பிரபு, மகளிரணி அணி நிர்வாகி மாலினி, மண்டல தலைவர்கள் பழனி, ரவிக்குமார், சதீஷ் மற்றும் ஆடிட்டர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதில் திருவள்ளூரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை பணியை விரைந்து செயல்படுத்தவும், ஆவடி மற்றும் திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம் விடுபட்ட பகுதிகளில் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவு நீர் ஏரியில் கலப்பதால் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும். பூண்டி ஏரியில் ஆழப்படுத்தும் நோக்கத்தில் விதிமுறை மீறி மண் எடுப்பதை பொதுப்பணித்துறை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவில் தொடங்கவும், ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருத்தணி அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் பணியாளர்களுக்கு போதிய சம்பளம் முறையாக வழங்க வேண்டும், கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தி குடிநீர் வசதியுடன் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.