75 வயது முதியவர் ஒருவர் தான் யாசகம் செய்த பணம் ரூ. 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு : கையில் பணம் இருந்தால் நிம்மதி இல்லை என்பதால் கல்வி, முதியோருக்கு உதவித்தொகையாக வழங்கி வருவதாக பேட்டி :

பதிவு:2023-05-24 15:36:21



75 வயது முதியவர் ஒருவர் தான் யாசகம் செய்த பணம் ரூ. 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு : கையில் பணம் இருந்தால் நிம்மதி இல்லை என்பதால் கல்வி, முதியோருக்கு உதவித்தொகையாக வழங்கி வருவதாக பேட்டி :

75 வயது முதியவர் ஒருவர் தான் யாசகம் செய்த பணம் ரூ. 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு : கையில் பணம் இருந்தால் நிம்மதி இல்லை என்பதால் கல்வி, முதியோருக்கு உதவித்தொகையாக வழங்கி வருவதாக பேட்டி :

திருவள்ளூர் மே 24 : பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை , மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்பது பழைய பாடல் வரிகள். ஆனால் பணம் இருந்தால் நிம்மதி இருக்காது. தூக்கம் வராது என்று யாசகம் எடுக்கும் பணத்தை அரசின் நிவாரணத்திற்காக தமிழகம் முழுவதும் பணம் வழங்கி வருகிறார் 75 வயது முதியவர் ஒருவர்.

இந்நிலையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் அரசுக்கு தன் பங்காக ரூ. 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார் அந்த 75 வயது முதியவர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கினர் பகுதியைச் சேர்ந்தவர் யாசகர் பூல்பாண்டி. 75 வயதாகும் இவர் மனைவி இறந்த பிறகு பிள்ளைகளுக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு தன்னந்தனியாக யாசகம் எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் யாசகம் எடுத்து இதுவரை ரூ.55 லட்சம் பணத்தை அரசுக்கு பொது நிவாரண நிதியாக வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் யாசகம் எடுத்து தன்னால் முடிந்தவரை கொரோனா நிதி உதவி, அரசு பள்ளி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மட்டுமின்றி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் கொடுத்து வருகிறார். இதுவரை பொது நிவாரண நிதிக்கு ரூ.55 லட்சத்து 60 ஆயிரம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக யாசகம் பெற்ற தொகையை கடைசியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் அரசுக்கு தன் பங்காக ரூ. 10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த முதியவர், யாசகம் எடுத்து சேர்க்கும் பணத்தை கையில் வைத்திருக்க மனம் இல்லை. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இந்த இடுப்பில் ஒரு துண்டும், தலையில் ஒரு துண்டும், உடலை போர்த்திக் கொள்ள ஒரு துண்டும் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். யாசகம் செய்யும் பணத்தை வீணாக செலவு செய்வதை விட பள்ளிகளுக்கு, முதியோர் இல்லத்திற்கு வழங்கி வருகிறேன்.

தற்போது, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கினாலும், அதில் எனது பங்காக ரூ. 10 ஆயிரத்தை அரசு நிவாரண நிதியாக வங்கியில் பணம் செலுத்தியதற்கான செலானை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தி உள்ளேன். பணம் கையில் இருந்தால் தூக்கம் வருவதில்லை. அதனால் யாசகம் செய்யும் பணத்தை கல்வி, முதியோருக்கு வழங்குவது மன நிம்மதியை தருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இனிமேல் எனக்கு வயதாகி விட்டதால் யாசகம் செய்ய போவதில்லை.ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து ஓய்வெடுக்க உள்ளேன் என்றார்.