பதிவு:2023-05-24 15:40:59
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள லைப் லைன் சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவையும், பாலியல் துன்புறுத்தலுக்காளாகும் குழந்தைகளை பரிசோதனை செய்யும் அறையையும் ஆவணங்களையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார்.
திருமுல்லைவாயலில் உள்ள மையமானது கூர்நோக்கு இல்லம் கிடையாது. இது ஒரு லைப் லைன் சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும், ஒரு லைப் லைன் சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்திலிருந்தும் கூர்நோக்கு இல்லத்திலிருந்தும் தப்பித்து செல்வதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கு லைப் லைன் சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் கவனமாக வைத்திருப்பது ஒரு குழந்தையின் மனநிலையாகும். அதற்கு தான் 15 நபர்களுக்கு ஒரு ஆலோசகர் தேவை உள்ளன. இந்த மையத்தை பொறுத்தவரை 15 நபர்களுக்கு ஒரு ஆலோசகர் உள்ளனர்.
இரண்டாவதாக முக்கியமான தகவல் ஒன்று தமிழ்நாட்டில் வெகு விரைவில் இன்னும் 10 நாட்களுக்குள் குழந்தைகளுக்கு நேரடியாக எம்சிபிஆர் பென்ஜ்சஸ் சொல்லியிருக்கிறோம்.இந்த எம்சிபிஆர் பென்ஜ்சஸில் கொடுத்தவுடனே குறைகள் கேட்கப்பட்டு உடனே அக்குறைகளுக்கு நிவர்த்தி செய்யப்படும். அவ்வாறு நிவர்த்தி செய்யப்படாத குறைகளுக்கு அதிகப்பட்சமாக 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். அப்படி அந்த 15 நாட்கள் கொடுத்தும் சம்மந்தப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு நினைவூட்டுதல், தொடர்ந்து சம்மன் என்று அனுப்புவோம். இவற்றை தமிழகத்திற்கு மீண்டும் புதுக்கோட்டையிலிருந்து தொடங்குகிறோம். இது வட்டார அளவிலான பென்ஜ்சஸ் என சொல்லப்படும்.
ஒரு குழந்தை பாலியலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து, எப்படி வெளியில் செல்ல வேண்டும் என்பதற்கு சில நெறிமுறைகள் உள்ளது. இதற்கு திருவள்ளூர் மருத்துவமனை ஒரு முன் மாதிரியான மருத்துவமனையாக உள்ளது. மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் இங்கு இருக்கும் நோயாளிகள், தாய்மார்களுக்கு சரியான முறையில் கவனித்து கொள்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திருவள்ளுர் மருத்துவ கல்லூரி ஒரு நல்ல முறையில் செயல்படுகிறது என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.
முன்னதாக, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள லைப் லைன் சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் 7 சிறுவர்கள் கடந்த மே 11-ம் நாள் இம்மையத்திலிருந்து வெளியேறியது குறித்து இம்மையத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து, மையத்தில் உள்ளவர்களிடம் கலந்துரையாடினார்
இவ்வாய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன்,சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மண்டல நிலைய அலுவலர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சுபலட்சுமி, வட்டாட்சியர்கள் வெங்கடேசன் (ஆவடி), மதியழகன் (திருவள்ளூர்), குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸீலியா, மருத்துவர்கள், செவிலியர்கள், மறுவாழ்வு மைய பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.