திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு :

பதிவு:2022-04-30 06:40:42

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு :

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு :

திருவள்ளூர் ஏப் 30 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதால் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 17 வயது சிறுவன் உண்மையை ஒப்புக் கொண்டதால் நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில் 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதை ஒப்புக் கொண்டதால் , இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை யாரும் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் குற்றம் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை தோறும் சுகாதார துறை சார்பில் வழங்கப்படும் பணியை செய்திட வேண்டும் என்று நீதிபதி ராதிகா நூதன தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.