கீழ்மேனி கிராமத்தில் ஏரியில் மண் எடுக்க அளித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வீசி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு :

பதிவு:2023-05-30 11:10:04

திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவிற்குட்பட்ட 71 கீழ்மேனி கிராமத்தில் 300 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி பிழைத்து வருகின்றனர். இந்த நிலையில் 71 கீழ்மேனி ஏரியில் பொது மக்கள் ஆட்சேபனை தெரிவித்தும் தற்போது அரசு குவாரி விடப்பட்டுள்ளது.ஏற்கனவே குவாரி விடப்பட்டதில் குவாரி உரிமையாளர்கள் அளிக்கப்பட்ட அளவை விட 20 முதல் 25 அடி ஆழம் வரை சவுடு மண் மற்றும் ஏரியின் அடிப்பகுதியில் உள்ள மணலையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே தாசில்தார், கலெக்டர் என அனைவரிடமும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அந்த குவாரியால் மழை காலங்களில் ஏரிகளில் ஒரு வாரத்திற்குள் மழை நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். கோடை காலங்களில் கால்நடைகளின் மேயச்சலுக்கு பயன்பட்ட ஏரியானது இன்று அதிகம் ஆழமாக இருப்பதால் மேய்யச்சலுக்கு ஏற்றதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் குவாரி விடக்கூடாது என கிராம மக்கள் ஆட்சேபனை தெரிவித்தும் குவாரி செயல்படத் தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளிக்க வந்தனர்.

காவல் துறை அனுமதி மறுத்ததால் கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வீசி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் புகார் மனுவை அளித்தனர்.விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.