சோழவரத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதில் ஓவியரின் 7 விரல்கள் துண்டிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு :

பதிவு:2023-05-30 11:11:41



சோழவரத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதில் ஓவியரின் 7 விரல்கள் துண்டிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு :

சோழவரத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதில் ஓவியரின் 7 விரல்கள் துண்டிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு :

திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஓவியரான இவரது மருமகன் சாந்தநாராயணன் கடந்த 20 ஆம் தேதி கடைக்கு சென்றவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது இவரது வாகனம் அருகில் வேறு சில வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் இவரது வாகனத்தை எடுக்கமுடியால் அவதிப்பட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர்களிடம் வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் இவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் இவரும் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரை மணி நேரத்தில் ஓவியர் செல்வம் வீட்டு அருகே அமர்ந்திருந்த போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் செல்வத்தை அழைத்து சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளனர். அதை தடுக்க முயன்றதால் செல்வத்தின் இரண்டு கைகளில் உள்ள 7 விரல்கள் துண்டாகி கீழே விழுந்தது.

இதனையடுத்து உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரல்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இரண்டு கைகளில் உள்ள 7 விரல்கள் துண்டாகி கைகளில் கட்டுப் போட்டுக் கொண்டு இருப்பதால் உடல் உபாதைகளை கழிக்கும் போது சுத்தம் செய்ய முடியாமல் மற்றவர் துணையோடு தான் அதை செய்ய முடிகிறது.மேலும் ஓவியரான செல்வம் கை விரல்கள் இல்லாமல் எதையுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். செல்வத்திற்கு 3 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதனால் இவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது. இதனையடுத்து கஞ்சா போதையில் தன்னை தாக்கியதுடன் கை விரல்கள் துண்டாகிப் போனதால் கஞ்சா போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் செல்வம் குடும்பத்துடன் வந்து தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததையடுத்து செல்வம் தனது குடும்பத்துடன் கிளம்பி சென்றார்.