தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள், இறப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-05-30 10:46:41

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள், இறப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் : திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி அருகே தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள், இறப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பி வி ரமணா தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் எம்பி்., பி.வேணுகோபால், மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கடம்பத்தூர் சுதாகர், பூண்டி மாதவன்,திருவாலங்காடு சக்திவேல், ஆர்.கே.பேட்டை கோ.குமார், திருத்தணி இ.என்.கண்டிகை. ரவி,பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன், நகர செயலாளர்கள் ஜி.கந்தசாமி, சௌந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் ராம்குமார்,வேல்முருகன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனையின் போது திமுக ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றம் சாட்டினார். மேலும், தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருப்பதாகாவும் அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பி.வி.ரமணா எச்சரித்தார்.

அனுமதியில்லாமல் செயல்பட்டதாக 75 மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசின் கையாளாகத தனமே காரணம் எனவும் குற்றம் சாட்டினார். .வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுக வீட்டிற்கு அனுப்பப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.