பதிவு:2023-05-30 11:16:03
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரியாதை நிமித்தமாத சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் :
திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பதவியிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வளர்ச்சிப்பணிகளை விரைவுப்படுத்தவும், நலத்திட்டப்பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதோடு இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நியமனம் செய்யப்பட்டார். அதன்பேரில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அலுவலகத்திற்கு அமைச்சர் ஆர்.காந்தி வருகை தந்தார். அப்போது, அங்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குரும், கூடுதல் கலெக்டருமான செ.ஆ.ரிஷப், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன்,துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், கே.அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் மோதிலால், காஞ்சிப்பாடி சரவணன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.