திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக 100 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

பதிவு:2023-05-30 11:22:19



திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக 100 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக 100 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் மே 30 : தமிழ்நாடு முதலமைச்சரால் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் வெற்றிபெற தேவையான பயிற்சி மற்றும் உதவிகள் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக துவக்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மூலமாக நேரடியாகவும் கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் 100 நாட்கள் நடைபெறவுள்ள இலவச பயிற்சி வகுப்புகளை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து மாணவ,மாணவியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

இரயில்வே,வங்கி,எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டமாகும். இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாட புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இப்பயிற்சி திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பதாரர்களை கொண்டு நடத்தப்படும்.

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலை பட்ட படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நமது திருவள்ளுர் மாவட்டத்தைச் சாந்த 565 மாணவர்கள் இப்போட்டித் தேர்விற்காக பதிவு செய்துள்ளனர். இதில் 150 மாணவர்கள் மட்டும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இங்கி வரும் கற்போர் வட்டம் வாயிலாக ஆன்லைன் மூலமாக 14 வட்டங்களில் அமைந்துள்ள மையங்களிலும் இப்பயிற்சி வகுப்பு நேரடி ஒளிபரப்பு வழங்கப்பட உள்ளது. இதனை கிராமப்புர இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மையங்களில் உள்ள நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. அப்புத்தகங்களை அரசு வேலை தேடும் இளைஞர்கள் படித்து பயன்பெறலாம்.

மேலும், கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் உயர் கல்வி, அரசு பணிகள், சுய வேலைவாய்ப்புகள், தனியார்துறை வேலைவாய்ப்புகள், அரசு நலத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. தாங்கள் அனைவரும் 100 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பினை திறன்பட பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இந்த மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு கடந்த ஆண்டிலிருந்து கற்போர் வட்டம் மூலமாக பயிற்சி வழங்கி வருகின்றோம். இன்னும் அதனை விரிவுபடுத்தி நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக இந்த முயற்சி எடுத்திருக்கிறோம். எனவே, இந்த போட்டித் தேர்வின் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வெற்றுபெறுவீர்கள் என்று உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், துணை முதல்வர் திலகவதி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் க.விஜயா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் இரா.ரவீந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், பயிற்றுநர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.