பதிவு:2023-05-31 22:42:08
திருவள்ளூர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் விவசாய அணி செயற்குழு கூட்டம் : விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் பெறுவதை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த தீர்மானம் :
திருவள்ளூர் மே 31 : திருவள்ளூர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் விவசாய அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட விவசாய அணி தலைவர் கே சுபாஷ் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் அஸ்வின்நரசிம்மா, பிரபாரி புருஷோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு விவசாயத்தை காப்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் நிதி வருடத்திற்கு ரூ.6000 வழங்குவதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றிய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குழுவின்டால் நெல்லுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது ஆனால் அதை இதுவரை நிறைவேற்றவில்லை.அதை நிறைவேற்ற வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகளை தூர்வாருதல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் சீமை கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் கொன்டு வேரோடு அகற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மின்சார வயர்கள் செல்லும் பகுதிகளில் மரம் செடி கொடிகள் படர்ந்து இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் ஒரு ஜேசிபி இயந்திரம் வழங்க வேண்டும். மேலும் அதன் மூலம் மின்வயர்கள் டிரான்ஸ்பார்மர் களை முறையாக பராமரித்து சீரான மின்வினியோகம் வழங்க வலியுறுத்தியும்,திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லிற்கு 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 லட்சம் விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக பெறுவதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மாபெரும் போராட்டம் பாஜக மாவட்ட விவசாய அணி சார்பில் நடைபெறும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வாசுதேவன் சங்கர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.