பதிவு:2023-06-02 11:52:58
பாஞ்சாலை ஊராட்சியில் உள்ள ரோட்டரி கிளப் சார்பாக செயல்படும் குழந்தைகளை பராமரிப்பதற்கான அனைத்து சிறப்பு வசதிகள் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பாஞ்சாலை ஊராட்சியில் உள்ள ரோட்டரி கிளப் சார்பாக செயல்படும் பாய்ஸ் டவுன் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வகுப்பறை, சமையலறை, தங்குமிடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு வசதிகளையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வு செய்து பேசினார்.
பாஞ்சாலை ஊராட்சியில் உள்ள பாய்ஸ் டவுன் என்ற குழந்தைகள் இல்லம் அனைத்து வசதிகளுடன் இளைஞர் நீதிச்சட்டத்தில் தெரிவித்துள்ளபடி கிட்டத்தட்ட 39 வருடங்களாக இவ்வில்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 86 பிள்ளைகள் அங்கு இருந்தார்கள். இவ்வில்லத்தில் வளர் இளம் குழந்தைகளுக்கு என்றும் சிறுவர்களுக்கு என்றும் தனியாக தங்கும் இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவல்வில்லத்தில் 110 குழந்தைகள் வரை தங்குவதற்கான இட வசதிகள் ஏற்படுத்தப்படுள்ளது. எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் குழந்தைகள் நலனுக்காக மட்டுமே இந்த ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் அமைப்பினர் இவ்வில்லத்தை மாணவர்களுக்கு இலவசமாக நடத்தி வருகின்றனர். குழந்தைகள் நலக்குழு மூலமாகவும் இளைஞர் நீதிக்குழுமத்தின் மூலமாவும் வரும் குழந்தைகளை எல்லா இல்லங்குள்கும் அனுப்பி வைத்து பராமரித்து வருகின்றோம் அந்த வகையில் இந்த இல்லத்திற்கும் குழந்தைகளை அனுப்பி வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.
அடுத்தபடியாக கடந்த ஆண்டு புதிதாக மாற்றுத்திறனாளிக்காக பிரேத்யேகமாக பயிற்சியும் வழங்கி வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரக்கூடிய Worth Private Industrial Training Centre Thiruvallur என்ற தொழிற்பயிற்சி மையத்தையும் தொடங்கியுள்ளனர். கை, கால்கள் செவி போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்காக இந்த மையத்தில் சிறப்பு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பையும் இவர்களே ஏற்படுத்தி தருகின்றனர்.
இம்மையத்தில் உள்ள வாய்ப்புகளை அனைத்து இளைஞர்களுக்கும் அளிக்கும் வகையில் வேலைத்தேடி வரும் இளைஞர்களுக்கும் வாய்ப்புக்களை நாடி வரும் இளைஞர்களுக்கும் இம்மையத்தின் மூலமாக ஓர் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் மூலமாகவும் மாணவர்களை சேர்க்குமாறு உரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மலர்விழி, ரோட்டரி கிளப் தலைவர் அரவிந்த் குமார் சங்கர், பிரதிநிதிகள் சுந்தரேசன் ரவி, ஜெயஸ்ரீ ஸ்ரீதர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.