திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 52 நபர்களுக்கு ரூ.61.91 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2023-06-07 21:32:17



திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 52 நபர்களுக்கு ரூ.61.91 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 52 நபர்களுக்கு ரூ.61.91 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள்  : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் ஜூன் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 82 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 43 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 74 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.

பின்னர் சென்னை புறவழிச் சாலை திட்டத்திற்காக திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியிலிருந்து நில எடுப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து வீடிழந்த மற்றும் வீடற்ற 39 நரிக்குறவர்கள்,13 ஆதிதிராவிடர்கள் என மொத்தம் 52 நபர்களுக்கு தோப்பு புறம்போக்கு வகைப்பாடு கொண்ட நிலத்தில் சுமார் ரூ.61.91 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மேலும் கடந்த மே 29 ம் தேதி திருவள்ளூர் வட்டம் வயலூர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் குடுப்பத்திற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியின் கீழ் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ. 50,000 க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், கலால் உதவி ஆணையர் பரமேஸ்வரி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின்,திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.