எண்ணூர் கழிமுகம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 1.60 இலட்சம் அவிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் பணிகள் : வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தனர்

பதிவு:2023-06-07 21:34:00



எண்ணூர் கழிமுகம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 1.60 இலட்சம் அவிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் பணிகள் : வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தனர்

எண்ணூர் கழிமுகம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 1.60 இலட்சம் அவிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் பணிகள் : வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தனர்

திருவள்ளூர் ஜூன் 06 : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக நடைபெற்ற மிஷ்டி திட்டம் துவக்க விழாவில் உவர் நிலப்பகுதிகளில் அதிகப்படியாக வளரக்கூடிய தாவரங்களான அலையாத்தி காடுகளை உற்பத்தியாக்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக எண்ணூர் கழிமுகம் பகுதியில் 1.60 இலட்சம் அவிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் துவக்கி வைத்து பேசினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்துவதுடன் இந்திய கரையோர வாழும் மக்களுக்கு சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை மூலம் மிஷ்டி இயக்கம் திட்டத்தின் நோக்கமாகும்.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் வங்கக்கடல் கடற்கரை கொண்டது. இவற்றில் சதுப்பு நிலப்பகுதி மற்றும் உவர்மண் கொண்ட பகுதியாகும். வங்கக்கடல் கடற்கரையோர நீரோட்டம் எண்ணூர் கழிமுகப்பகுதியின் முகத்துவாரத்துடன் 9.20 சதுர கிலோமீட்டர் கொண்ட பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், எண்ணூர், அத்திப்பட்டு, வள்ளூர், இடையஞ்சாவடி, சடையாங்குப்பம், திருவொற்றியூர், கத்திவாக்கம் மற்றும் எர்ணாவூர் ஆகிய பகுதிகளில் அலையாத்திகாடுகள் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் நாளான இன்று அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, காட்டுப்பள்ளி வருவாய் கிராமம், புழுதிவாக்கம் கிராமப் பகுதியில் மிஷ்டி இயக்கம் திட்டம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகள் நடவு செய்து வெற்றிகரமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நடப்பு இரண்டு ஆண்டுகளில் 1.60 லட்சம் அலையாத்தி மரக்கன்றுகள் எண்ணூர் கழிமுகபகுதியில் நடப்பட உள்ளது என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக காட்டுப்பள்ளி பகுதியில் வனத்துறை சார்பாக நடைபெற்ற மிஷ்டி திட்டம் துவக்க விழாவில் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராம வன குழு நிதியிலிருந்து 3 மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவியாக தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ 3 இலட்சத்திற்கான காசோலையைகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொஹாபத்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினகாப்பாளர் சீனிவாஸ்.ரா.ரெட்டி,கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் தீபக் ஸ்ரீ வஸ்தவா, வி.நாகநாதன், தலைமை வன பாதுகாவலர் கௌ.கீதஞ்சலி,மாவட்ட வன அலுவலர் கோ.ராம் மோகன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.