பதிவு:2023-06-07 21:38:19
திரூவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் :
திருவள்ளூர் ஜூன் 06 : திரூவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2023 ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தினம்,நெகிழி பயன்பாட்டினை குறைப்பது குறித்தும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பானுமதி தலைமை பேசுகையில்,சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், வேளாண்மையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் உத்திகள் குறித்தும் அறிவியல் நிலையத்தின் முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, முனைவர். கோபால், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நுண்ணுயிர்களின் பங்கு குறித்து விளக்கினார்.ஐ.எப்.எப்.ஓ நிறுவனத்தை சார்ந்த காளிதாஸ் நானோயுரியா,நானோ டிஏபி ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான உர மேலாண்மை குறித்து விளக்கினார்.
பின்னர் ப்ரீத்தி வீட்டுத் தோட்டம், மரம் வளர்க்கும் முறைகள்,அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.தொடர்ந்து, செந்தில்குமார் விவசாயத்தில் ட்ரோன்கள், தானியங்கி கருவிகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பேசினார்.
மேலும் விஜயசாந்தி, இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை,தேனீ வளர்ப்பு குறித்தும்,சிவகாமி, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும்,அருள்பிரசாத் வேளாண்மையில் காலநிலையின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
முன்னதாக வேளாண் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்தும், இ - வாடகை செயலி குறித்தும் பேசினார். பின்னர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டன.மேலும் சுற்றுச்சூழல் குறித்த வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் விவசாயிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.