பதிவு:2023-06-07 21:42:25
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஜமாபந்தி முதல் நாளில் 195 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு மூலம் 7 பேருக்கு பட்டாக்கள் : பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்
திருவள்ளூர் ஜூன் 07 : திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்திரி சுப்ரமணியம் தலைமை தாங்கினார் . வட்டாட்சியர் என்.மதியழகன், நீதியியல் வட்டாட்சியர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள், தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை நேரில் அளித்தும், பட்டா மாறுதல் மனு கொடுத்தும் தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜமாபந்தி முதல் நாளான நேற்று திருவள்ளூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம், புங்கத்தூர், ஓதிக்காடு, புன்னப்பாக்கம், சேலை, காக்களூர், கல்யாணக்குப்பம், தண்டலம், ஈக்காடு, பெரியகுப்பம், புட்லூர் ஆகிய கிராம மக்கள் பட்டா மற்றும் சான்றிதழ்கள் கேட்டு மனு அளித்தனர்.
195 பட்டா மற்றும் சான்றிதழ்கள் கேட்டு மனு கொடுத்திருந்தனர். இதில் 7 பேருக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 7 பேருக்கு பட்டா வழங்கினார். மேலும் பட்டா கேட்டு விண்ணப்பத்தவர்களிடமும் மனுக்களை பெற்றார்.மேலும் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 100 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கக்கோரி நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அதேபோல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் என்கிற தாமஸ் அந்த பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாத 150 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், அவைத் தலைவர் தா.எத்திராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லாகான், முன்னாள் நகரமன்றத் தலைவர் பொன்.பாண்டியன், மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் கணேஷ், தலைமை நில அளவையர் செந்தில்குமரன், விஏஓக்கள் வி.சுந்தர்ராஜ், கிருஷ்ணன், விஸ்வநாதன், குமரன், பரணிதரன், பிரதீப் குமார், சுந்தர்ராஜ், சுகுமார், சீனு, ஆனந்த வேலு, ஆனந்த வேலு, பாரதி, பூங்கொடி, மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தண்ணீர்குளம், புல்லரம்பாக்கம் மற்றும் பூண்டி குறுவட்டத்தை சேர்ந்த பூண்டி, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், கண்ணம்மாபேட்டை, தோமூர், திருப்பேர், காட்டானூர், அரும்பாக்கம், மோவூர், நெய்வேலி, சித்தம்பாக்கம், ராமதண்டலம், எறையூர், சீயஞ்சேரி, மொண்ணவேடு, அல்லிக்குழி, பிளேஸ்பாளையம், அர்சன்நகரம்,கெங்கலு கண்டிகை உள்பட 10 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
அதே போல் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாய கூட்டத்திற்கு திருவள்ளூர் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.
இதில் பூந்தமல்லி தனி வட்டாட்சியர் (ச.பா.தி), வேளாண்துறை அலுவலர், காவல் ஆய்வாளர், பூவிருந்தவல்லி, வட்டார வளா்ச்சி அலுவலர், பூவிருந்தவல்லி, வட்ட சார் ஆய்வாளர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பூந்தமல்லி துணை வட்டாட்சியர் (தேர்தல்) , மண்டல துணை வட்டாட்சியர் வட்ட துணை ஆய்வாளர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், அனைத்து அலுவலக பணியாளர்கள், வட்ட ஆவண வரைவாளர், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் முழு புல பட்டா மாற்றம் தொடர்பாக 19 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 21 மனுக்களும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 28 மனுக்களும், சான்றிதழ் தொடர்பான மனுக்கள் 7-ம், முதியோர் உதவித் தொகை தொடர்பாக 6 மனுக்களும், இதர துறை மனுக்கள் 27-ம், மற்ற கோரிக்கைகளுக்காக 2 மனுக்களும் என 110 மனுக்கள் பெறப்பட்டது.
பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலால் உதவி ஆணையரும், ஜமாபந்தி அலுவலருமான பரமேஸ்வரியிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் கோரிக்கைகளை மனுக்களை அளித்தார். அருகில் வட்டாட்சியர் இரா.மாலினி, ஒன்றிய குழு உறுப்பினர் வி. கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.