பதிவு:2023-06-11 14:51:48
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சத்து ரூ.61 ஆயிரம் கொள்ளை வழக்கில் 3 பேரை கைது செய்து விசாரணை
திருவள்ளூர் ஜூன் 10 : திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் அகிலன்(43). திருவள்ளூர் - சிடிஎச் முக்கிய சாலையில் தனது தாய் கௌசல்யாவுடன் வசித்து வருகிறார். விவசாயியான அகிலன் கடந்த 6-ந் தேதி) பூண்டி அடுத்த நெய்வேலி கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார். இதனால் அகிலனின் தாயார் கௌசல்யா என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அதே பகுதியில் உள்ள சித்தி சுகந்தி என்பவரது வீட்டிற்கு 6-ந் தேதி இரவு 9 மணியளவில் சென்றுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் (7-ந் தேதி) காலை தாய் கௌசல்யா மற்றும் சித்தி சுகந்தி ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு குறித்து மகன் அகிலனுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தரை தளத்தில் தாய் கௌசல்யா தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகள் ஆகியவற்றையும் முதல் தளத்தில் உள்ள அகிலன் வீட்டின் பூட்டையும் உடைத்து, பீரோவில் இருந்த நகை, பணம் என மொத்தம் 40 சவரன் நகை, 5 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணம்,3 கிலோ வெள்ளி, 24 பட்டுப்புடவைகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அகிலன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட விசாரணையில், கைரேகை நிபுணர்கள் சேகரிக்கப்பட்டவரின் தடயத்தில் பழைய குற்றவாளி ஒருவரின் கைரேகையோடு ஒத்துப் போனது. இதனால் அவரைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
தொடர் விசாரணையில் அவர்கள் ஆவடி பழைய கல்லு கடை தெருவை சேர்ந்த சிவலிங்கம் மகன் தனசேகர் என்கிற சஞ்சய் (18), சென்னை பட்டாளம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த மோசஸ் மகன் லாசர் (20), மற்றும் வில்லிவாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த சின்ன மாசி என்பவரது மகன் ராதாகிருஷ்ணன் (18) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் மூன்று பேரும் கடந்த ஆறாம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆவடி சாலையில் வீடு பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அக்கம்பக்கம் நோட்டமிட்ட இந்த மூன்று பேரும் சுவர் ஏறி குறித்து உள்ளே இறங்கி வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்தது தெரியவந்தது.மேலும் இந்த மூன்று பேரும் கடந்த ஆண்டு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.