திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை புல்லரம்பாக்கத்தில் வேரோடு மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பதிவு:2023-06-11 14:53:18

திருவள்ளூர் ஜூன் 10 : திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூண்டி புள்ளரம்பாக்கம் பெரியகுப்பம் ஈக்காடு காக்களூர் மணவாளநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. திருப்பாச்சூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.