2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ பேச்சு

பதிவு:2023-06-13 20:38:37



திருவள்ளூரில் பாஜக 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் : 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ பேச்சு :

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ பேச்சு

திருவள்ளூர் ஜூன் 12 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராஜசிம்ம மகேந்திரா (எ)அஸ்வின் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளராக ஆர் கருணாகரன், பொதுக்கூட்ட பொறுப்பாளராக ஆர்யா சீனிவாசன், பொதுக்கூட்ட பொறுப்பாளராக ஆவடி எஸ்.கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர்.

நிர்வாகிகள் லயன் ஆர்.சீனிவாசன், கே.ஜெய்கணேஷ், பி.ஆர்.மதுசூதனன், சி.பி.ரமேஷ், டி.பாலாஜி, எம்.பன்னீர்செல்வம், வி.சண்முகம், ஆர்.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கே.சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் நடிகையுமான குஷ்பூ, மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசினர்.

இக்கூட்டத்தில் குஷ்பூ பேசும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நாள் ஒன்றுக்கு 12 கி.மீட்டர் தூரத்திற்கு தான் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசு 30 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை படைத்து வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 60 கி.மீட்டர் தூரம் சாலை அமைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார். 14 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு முழுவதும் 60 விமான நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 100 விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டு 160 விமான நிலையங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா காலங்களில் கோவாக்சின், கோவி ஷீல்டு என 2 தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அதை செலுத்தியதுடன் பல்வேறு உலக நாடுகளுக்கும் சப்ளை செய்த அரசு மோசி தலைமையிலான மத்திய பாஜக அரசு தான் என்றார். தமிழை வளர்க்கின்றோம். தமிழ் தமிழ் என கூறும் திமுகவினர் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி அதில் ஏன் இந்தியை திணிக்கின்றீர்கள். வெறும் தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நீங்கள் நடத்த வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசும்போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமை கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார். தமிழில் திருக்குறள், பாரதியார் கவிதைகள் என எந்த விழாவாக இருந்தாலும் தமிழ் குறித்து பேசி தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார். தற்போது நடந்த பாராளுமன்ற திறப்பு விழாவிலும் 21 ஆதீனங்களை வைத்து தமிழை ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்தவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டினார். விவசாயிகளுக்கு நியாயமான விலை, உரம் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு 6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது..

மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் இந்தியாவில் உள்ள 50 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி டிஜிட்டல் முறையை வேகப்படுத்தியுள்ளார். கழிவறை இல்லாத வீடே இருக்க கூடாது என்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் 11.72 கோடி குடும்பங்களுகு இலவச கழிவறை கட்டித் தரப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், பாஜகவின் சாதனைகளை சொல்லியே தேர்தலில் வெற்றி பெறுவோம். அதே போல் தமிழ்நாட்டிலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் மாலினி ஜெயச்சந்திரன், முல்லை ஞானம், எஸ்.டில்லிபாபு உள்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.