திருவலாங்காடு ரயில் நிலையத்தில் பயங்கரம் : கஞ்சா விற்பனையில் இரண்டு தரப்புக்கிடையே மோதல்: வாலிபரை வெட்டி கொலை செய்ய முயற்சி: அரக்கோணத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் வெறி செயல்....

பதிவு:2023-06-13 20:39:44

திருவள்ளூர் ஜூன் 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு ரயில் நிலையத்தில் பட்ட பகலில் இந்த பகுதியில் இன்று காலை இதே பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் வயது என்ற இளைஞரை, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் பள்ளிப்படிப்பு படிக்கும் கார்த்திக் மற்றும் விஷால் ஆகிய நான்கு பேர் கையில் பயங்கர கத்தியுடன் ரயில் நிலையத்தில் வைத்து துரத்தி துரத்தி இளைஞர் இர்ஃபானை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அதே பகுதியில் இருந்த ரயில் நிலையத்திலிருந்து அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்த தாரிப் வயது 24 என்ற இளைஞர் இர்ஃபானை கொலை செய்தவர்களை தடுக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது இந்த கொலை சம்பவத்தில் இர்பான் தலையில் பயங்கர வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்தங்கள் அதிகம் வெளியேறி ஆபத்தான நிலையில் அந்த பகுதியில் மயங்கி விழுந்தார். வெட்ட வந்தவர்களை தடுத்த தாரிப் என்பவர் வெட்ட வந்த மூர்த்தி என்ற இளைஞரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்த இர்ஃபான் மற்றும் அவரது நண்பரான அரக்கோணம் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஆகியோர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடும்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மூர்த்தி என்பவர் ரயில் நிலையத்தில் வைத்து இர்ஃபானை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது . கஞ்சா போதையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் நிலையத்தில் படுகொலை செய்ய கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் ரயில் நிலையத்திற்கு வந்த பொது மக்களை அச்சமடைய செய்ததுள்ளது.