திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் அறிவிப்பலகை திறப்பு விழா.

பதிவு:2022-05-02 23:08:58



தமிழக ஆன்மிக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக புதுப்பட்டு அரசு பள்ளி அருகே அறிவுப்பலகை திறக்கப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் அறிவிப்பலகை திறப்பு விழா.

திருவள்ளூர் மே 2_ தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக அறிவுத்திறனை வளர்க்க அறிவுபலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அறம் பொருள் இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாக பிரித்தும் அழகுடன் இணைத்தும் தமிழக மக்களின் வாழ்வில் உயிராய் கலந்து காலத்தால் அழியாமல் தமிழர்களின் இதயங்களில் திருக்குறள் நிலைத்து கொண்டிருக்கிறது,

இதனை மாணவர்கள் கிராமப்புற மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக ஆன்மீகம் விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் திருக்குறள் அறிவுபலகை பல்வேறு கிராமங்களில் திறக்கப்பட்டு வருகிறது

கடந்த வாரம் கீழ்நல்லாத்தூர் பகுதியில் அறிவிப்பலகை திறந்ததை தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் புதுப்பட்டு அரசு பள்ளி எதிரே மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்குறள் அறிவுப்பலகை திறப்பு விழா நிகழ்ச்சி தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஷ் ஜி தலைமையில் அறிவிப்பலகை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு புதுப்பட்டு வெ. து .ஏழுமலை நாயக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிவிப்பலகையை திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக புதுப்பட்டு. ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் இளங்கோ, பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ரவி, மற்றும் தமிழ்க ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேஷன் நிர்வாகிகள் மன்ற ஆலோசகர் பாஜக கிளைத் தலைவர் A.சிவ பழனி மன்ற பொறுப்பாளர் பூபதி, உறுப்பினர்கள் DS யுவனேஷ், நவீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் புதுப்பட்டு கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.