பதிவு:2023-06-13 20:42:50
வேளகாபுரம் கிராமத்தில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மியாவாக்கி (அடர்வனம் ) காடு உருவாக்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூன் 12 : சென்னையில் உள்ள சிப் அகாடமி திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட வேளகாபுரம் கிராமத்தில் மியாவாக்கி (அடர்வனம் ) காடு உருவாக்கும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவரது துணைவியார் கோபிகா ராஜிவ் மற்றும் மாணவ மாணவிகளுடன் இணைந்து செடியினை நட்டு துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பல மரக்கன்றுகள் நடப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளிடையே பேசிய போது, காலநிலை மாற்றமானது அடுத்த தலைமுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆகவே இதுபோன்ற மரக்கன்றுகள் நடுதல், காடு வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது என்றும் சிறுவர் -சிறுமியர்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் நடுதல் போன்றவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் மிகவும் அவசியமானது என்றும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.
இதில் சிப் அகாடமியின் மேலாண்மை இயக்குனர் தினேஷ் விக்டர், நிதி இயக்குனர் சராளா இதன் அலுவலர்கள் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சேகர், வேளகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி , கிராம நிர்வாக அலுவலர் பரத், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன்,திட்ட மேலாளர் விஜயன், கள ஒருங்கிணைப்பாளர்கள் தினகரன், பழனி மற்றும் கிராம தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.