பதிவு:2023-06-13 20:47:09
திருவள்ளூரில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூன் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். அதன்படி முதலாவதாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக தயார் செய்யப்பட்ட கல்வி உபகரணங்களை ஏழ்மை நிலையில் உள்ள பல்வேறு குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியும், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, வழியனுப்பி வைத்தார். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, அக்கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தையை பாராட்டி, பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பி.ஷோபனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, அலுவலக மேலாளர் (நீதியியல்) டி. மீனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸீலியா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன்,பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.