பதிவு:2023-06-15 22:07:56
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) மற்றும் வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூன் 15 : 2023-ஆம் கல்வியாண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்குற்பட்ட அம்பத்தூர், அம்பத்தூர் (மகளிர்), மற்றும் வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுக்ளுக்கான சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய 20.06.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது. ஏதேனும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.50 Debit Card/Credit Card/Net Banking/Gpay வாயிலாக செலுத்த வேண்டும்.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு அரசால் விலையில்லா, மடிக்கணணி, பாடப்புத்தகம், மிதிவண்டி, சீருடை மற்றும் காலணியுடன் சேர்த்து மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்,முதல்வரை நேரடியாகவே அல்லது 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.