பதிவு:2023-06-18 22:28:54
திருவள்ளூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஏசி டாஸ்மாக் பார் : ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை
திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூரில் அனுமதியின்றி ஏசி வசதியுடன் கூடிய டாஸ்மாக் பார் இயங்குவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து திருவள்ளூர் டாஸ்மாக் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி அனுமந்தன் ஆகியோர் திருவள்ளூர் சி.வி.என் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை மேற் கொண்டனர்.
தனியார் பார் நடத்த அனுமதி பெற்றிருந்த நிலையில் ஏசி வசதியுடன் கூடிய பார் நடத்த அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரியவந்தது.இதனை அடுத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வருவாய்த் துறையினர் எச்சரித்துவிட்டு சென்றனர்.மேலும் உடனடியாக ஏசி வசதியுடன் கூடிய பார் நடத்த அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.