சித்தம்பாக்கம் ஏரி சவுடு குவாரியில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு :

பதிவு:2023-06-18 22:31:11

சித்தம்பாக்கம் ஏரி சவுடு குவாரியில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு :

சித்தம்பாக்கம் ஏரி சவுடு குவாரியில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு :

திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரையிலான சாலை விரிவாக்க திட்டப் பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து சாலை விரிவாக்கப் பணிக்காக சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் எடுக்க கனிமவளத்துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்டது.

எல் அன்ட் டி மூலம் சவுடு மண் எடுக்க அனுமதி அளித்த நிலையில் முறையாக சவுடு குவாரி நடைபெறுகிறதா என கனிமவளத்துறை துணை இயக்குனர் லஷ்மி பிரியா மற்றும் உதவி பொறியாளர் செல்வகுமாரி, கொசஸ்தலையாறு பிரிவு உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உதவி புவிவியலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் சித்தம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர்.அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மண் எடுக்கிறார்களா அல்லது கூடுதலாக எடுக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.