திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்‌ கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 19-ம் தேதி வரை முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம்

பதிவு:2023-06-18 22:32:09

திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உத்ஸவம் நடைபெறும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆனி மாத முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம் இன்று 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த திருக்கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், ஆனி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் இன்று நடைபெற உள்ளது. இதில், உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் பெருமாளை வழிபடுவதுண்டு.

இன்று 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவத்திற்கான ஏற்பாடுகளை வைத்திய வீரராகவர் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.