பதிவு:2023-06-20 20:32:05
திருவள்ளூர் வட்டத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
திருவள்ளூர் ஜூன் 20 : அரசு ஏற்கனவே வழங்கிய எம்பிசி சான்றிதழை மாற்றி எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும். எஸ்டி மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 1191 பேரும் மாநிலம் முழுவதும் 42 ஆயிரம் பேரும் பயன்பெறுவார்கள்.
இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பெயரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நரிக்குறவன். குருவிக்காரன் இன சமூக மக்களுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் என்.மதியழகன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் (பெரியகுப்பம் ) பிரதீப், (ஒதிக்காடு) காதர் நிஷா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டில் ரயில்வே மேம்பாலம் கீழே வசித்து வரும் இடத்திற்கே சென்று நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரன் இன சமூக மக்களுக்கு பழங்குடியினருக்கான எஸ்டி சான்றிதழ் வழங்குவதற்காக ஆதார் கார்டு உள்பட ஆவணங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 30 பேருக்கு இந்த பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வட்டாட்சியர் என்.மதியழகன் தெரிவித்தார்.
இந்த முகாமில் 26-வது வார்டு நகரமன்ற திமுக உறுப்பினர் தனலட்சுமி, இ சேவை மைய அலுவலர் வினோத் ஆகியோர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர்.அதே போல் திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட அதிகத்தூரில் நடைபெற்ற முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் லில்லி ஒயிட் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா, கிராம நிர்வாக அலுவலர் மோகனா ஆகியோர் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
அதே போல் அம்மனம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் வரதராஜன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலரக் காயத்திரி ஆகியோர் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.திருவள்ளூர் வட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற முகாமில் கிட்டத்தட்ட 100 நரிக்குறவர், குருவிக்காரன் இன சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக வட்டாட்சியர் என்.மதியழகன் தெரிவித்தார்.