பூண்டி ஏரியில் கடல் போல் மேலெழும் அலைகளால் மதகுகள் மற்றும் மீட்டர் அருகே கரைகளில் ராட்சத விரிசல்களால் மண் சரியும் அபாயம் : அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பதிவு:2023-06-20 20:33:23

திருவள்ளூர் ஜூன் 20 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 1257 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது . இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 330 கன அடி கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாகவும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பூண்டி ஏரியில் தண்ணீர் கடல் அலை போல் மேல் எழும்புவதால் ஏரியின் மதகுகள் மற்றும் மீட்டர் அருகே உள்ள கரைகளில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் தண்ணீர் கடல் அலைபோல் மேலேழும்புவதால் விரிசல்கள் பெரிதாகி மண் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக நீர்வளத்துறையினர் மதகு மற்றும் மீட்டர் அருகே கரைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்