பதிவு:2023-06-20 20:35:37
திருத்தணி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிராணி. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முப்பது வெட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இதனை அடுத்து இருவரும் சகஜமாக பேசி வந்துள்ளனர். ஆற்காடுகுப்பத்திற்கு வினோத்குமார் அடிக்கடி சென்று டில்லிராணியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வினோத்குமார் டில்லி ராணியுடன் சரிவர பேசததால் சந்தேகமடைந்து விசாரித்ததில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்ய உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த டில்லிராணி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வினோத்குமாரை கைது செய்தனர்.