பதிவு:2023-06-20 20:38:07
திருவள்ளூர் -ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே 35 வயதுடைய இளைஞர் சடலம் மீட்பு : ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர் ஜூன் 20 : சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கும் இடையே இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார் அங்கு சென்று பார்த்த போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சிக்னல் அருகே இறந்து கிடப்பது தெரியவந்தது.
அதிகாலை சென்னையிலிருந்து அரக்ககோணம் மார்க்கமாக சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பயணித்த அந்த இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து சிகனல் கம்பத்தில் தலை மோதி உயிரிழந்தாரா அல்லது வேறு யாரேனும் அடித்துக் கொலை செய்து வீசி சென்றார்களா என அடையாளம் தெரியாத 35 வயது இளைஞர் உடலை மீட்டு திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்து வீசிவிட்டு சென்றார்கள்? என்பது குறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.