பதிவு:2023-06-21 20:22:27
திருவள்ளுர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 22 ம் தேதி நேர்காணல் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வெளிச்சந்தை முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
அமைப்பியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 22.06.2023 அன்று காலை 10 மணிக்கு வெளிச்சந்தை மூலம் நடைபெறும் நேர்காணலில் கல்விச்சான்று,பள்ளி மாற்றுச்சான்று, இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை),பணி முன் அனுபவச்சான்று (2 ஆண்டுகள்), கணிணி கல்வித்தகுதி,ஓட்டுநர் உரிமம் ஆகிய சான்றுகளுடன் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.