திருத்தணி அடுத்த ஆர் கே பேட்டை அருகே கஞ்சா போதையில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபரை பீர் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திய 3 பேர் கைது :

பதிவு:2023-06-21 20:32:33

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் குமரேசன், மஞ்சுநாதன், செந்தமிழன், பிரபாகரன் ஆகியோர் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ள ஏரியில் மின் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த குமரேசன் என்பவர் அங்கு நின்று கொண்டிருந்த அருந்ததி காலனியைச் சேர்ந்த துளசி என்ற வாலிபரை கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் துளசியை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பாக தாமோதரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் உட்பட 3 பேரை கைது செய்து தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் குமரேசன், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.