பதிவு:2022-05-02 23:30:08
பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டிப் பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக பூண்டி அணை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து சதுரங்கப்பேட்டை வரை நடைபெற்ற மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களிடையே பூண்டி அணைப்பகுதி குறித்த விழப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து புறப்பட்ட மிதிவண்டி பேரணி பூண்டி அணை நோக்கி சென்று, பூண்டி அணையின் பக்கவாட்டு சாலை வழியாக சதுரங்கப்பேட்டை வரை சென்றது. இம்மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு, மிதிவண்டியை இயக்கி பொதுமக்களிடையே பூண்டி அணை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த மிதிவண்டி பேரணியில் திருவள்ளூர் டிரக்கர்ஸ் சைக்கிளிங்க் கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜி.சிவக்குமார், பூண்டி நீர்த்தேக்க உதவி பொறியாளர் ரமேஷ், திருவள்ளூர் டிரக்கர்ஸ் சைக்கிளிங்க் கிளப் நிர்வாகிகள் லோகேஷ் ராஜா, ராகுல் சர்மா உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.