பதிவு:2023-06-21 20:34:43
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவன் கழுத்து இறுக்கி பலி :
திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் எலக்ட்ரீசியன். இவரது மகன்தமிழ்மாறன் காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஊஞ்சலில் சேலையை தனது கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் சுற்றியிருந்த சேலை கழுத்தை பலமாக இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றார்.இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் தமிழ் மாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.