திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் டாஸ்மாக் பார்-க்கான 4 மாத குத்தகை தொகை செலுத்தாததால் சீல் வைத்து அதிரடி :

பதிவு:2023-06-21 20:36:23



திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் டாஸ்மாக் பார்-க்கான 4 மாத குத்தகை தொகை செலுத்தாததால் சீல் வைத்து அதிரடி :

திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் டாஸ்மாக் பார்-க்கான 4 மாத குத்தகை தொகை செலுத்தாததால் சீல் வைத்து அதிரடி :

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் 2 டாஸ்மாக் கடைகள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தின் பின்புறம் டாஸ்மாக் பார்-ம் செயல்பட்டு வருகிறது.திருநின்றவூரைச் சேர்ந்த மோகன் என்பவர் பார் ஏலம் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த மே மாதம் தஞ்சாவூரில், டாஸ்மாக் ‘பாரில்’ மது அருந்தி, இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி செயல்பட்டு வந்த 71 பார்-க்கு சீல் வைத்தனர்.

அதில் தலக்காஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் பார்-ம் அடக்கம். இந்நிலையில் தற்போது ஒரு மாதத்திற்கான குத்தகை தொகையை மட்டும் செலுத்தி பார் நடத்த தொடங்கியிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.ஆனால் கடந்த 4 மாதங்களாக பார் நடத்த குத்தகை தொகை செலுத்தாமல் இருந்ததால் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி 4 மாத குத்தகை தொகை கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் வரை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் குத்தகை தொகையை செலுத்தாததையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயக்குமார், கலால் இன்ஸ்பெக்டர் தேவிகா மற்றும் போலீசார் 4 மாத குத்தகை தொகை செலுத்தாத பார்-க்கு சீல் வைத்தனர்.மேலும் அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்காமல் இருப்பதால் உடனடியாக விலைப்பட்டியலையும் அதிகாரிகள் வைத்துவிட்டு சென்றனர்.