திருவள்ளூர் நகராட்சி வடக்கு ராஜவீதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பாழடைந்து பள்ளி நடத்ததகுதியில்லை என நீதிமன்றம் உத்தரவு : மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் மாணவர்கள் முற்றுகையிட்டு படிக்கும் போராட்டம் :

பதிவு:2023-06-21 20:38:56

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதியில் உள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி.தஞ்சாவூர் இராம நாயக்கன் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பள்ளி 99 ஆண்டுகால குத்தகை மூலம் கடந்த 13.6.1927 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடைபெற்று வந்தது. கடந்த 20.6.1940 முதல் திருவள்ளூர் நகராட்சி சார்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி ஆரம்பப் பள்ளியாக ஏற்று நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இப்பள்ளி கட்டிடத்தில் எல்கேஜி முதல் 8 ம் வகுப்பு வரை மற்றும் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 99 ஆண்டு கால குத்தகை காலம் முடியும் தருவாயில் இருப்பதாலும் அந்த கட்டிடம் இராம நாயக்கன் டிரஸ்ட்டுக்கு தேவைப்படுவதாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

99 ஆண்டு கால குத்தகைக்கு இந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட அதே நிலையில் தான் தற்போதும் பள்ளி செயல்பட்டு வருகிறது. எந்த மாற்றமும் செய்யாததால் கட்டிடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பயிலும் 180 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என நீதிமன்றத்திலும் தனது வாதத்தில் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் அண்ணா யூனிவர்சிட்டி தொழில்நுட்ப கட்டிடப் பிரிவு பார்வையிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 12 தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்த அண்ணா யூனிவர்சிட்டி தொழில்நுட்ப கட்டிடப் பிரிவு, இந்த கட்டிடம் பள்ளிக் கூடம் நடத்த தகுதியில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நகராட்சி பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் பள்ளி அருகாமையில் உள்ள ஏழை எளிய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென பள்ளியை வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவலினை பள்ளியின் வெளியே ஒட்டப்பட்டிருந்ததை அறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகப் பணி காரணமாக பூந்தமல்லி சென்றிருந்ததால் மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகாத்திலேயே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பெற்றோர்களே பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆட்சியர் மற்றும் பெற்றோரிடையே பேச்சு வார்த்தை இன்று நடத்த இருப்பதாகவும், பள்ளியை அதே இடத்தில் தொடர வற்புறுத்தப் போவதாகவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்தனர்.