நத்தமேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

பதிவு:2023-06-22 21:44:13



நத்தமேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை.

நத்தமேடு ஊராட்சியில் 
அடிப்படை வசதிகள்
செய்துதர கோரிக்கை

நத்தமேடு, ஜூன் 22 திருவள்ளூர் ஒன்றியத்துக்குட்பட்ட நத்தமேடு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் மஞ்சுளா இளையான் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் ஒன்றியம் நத்தமேடு ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு உறுப்பினர் மஞ்சுளா இளையான் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது நத்தமேடு ஊராட்சி இரண்டாவது வார்டு ஆதிதிராவிடர் மக்களுக்காக கடந்த 2015 சுடுகாட்டுக்கான இடம் அன்றைய மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆய்வு செய்து நத்தம்பேடு சர்வே எண் 436 நஞ்சை கொண்ட அனாதினம் 25. S நிலம் மாற்றம் செய்து தேர்வு செய்யப்பட்டது.

இதுவரை எட்டு ஆண்டு கடந்தும் அதற்கான இடத்தை ஒதுக்கிய போதும் சுடுகாடு கட்டித் தரவில்லை. அடிப்படை வசதி இல்லாததால் சுடுகாடு அடர்ந்த புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிநிற்பதால் இறந்தவர்களின் உடல்களை ஏரி கரைமேல் கொண்டு சென்று புதைக்கும் அவலம் உள்ளது.

எனவே இந்த சுடுகாட்டைசுற்றியில் சுற்றுச்சுவர் அமைக்கவும், கைப்பம்பு, மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றை அமைத்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தாமதித்தால் எந்த வசதியும் செய்து தரவில்லை என்றால் நத்தம்மேடு கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டதில் ஈடுபடுவோம் என்பதை மனுவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று மக்கள் குறைத்திருக்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளார்.