திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

பதிவு:2023-06-22 21:54:58



திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு :  மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி என, 9 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் வசதிக்காக, இங்கு பணியாற்றி வரும், 14 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி ஏ.மதன்– கும்மிடிப்பூண்டி தனி வட்டாட்சியர் திருத்தணி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். எஸ்.விஜயகுமார் டான்சிட்கோ கிண்டி தனி வட்டாட்சியர் ஆவடி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.ஜி.விஜயகுமார்–திருமழிசை டாஸ்மாக் உதவி மேலாளர், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.

எம்.இன்பராஜ், கும்மிடிப்பூண்டி தனி வட்டாட்சியர் பள்ளிப்பட்டு வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.எஸ்.உதயம், கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஆவடி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.த.சசிகலா வட்டாட்சியர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.ஆர்.மணிகண்டன், ஆவடி தனி வட்டாட்சியர் நில எடுப்பு திட்டம், சென்னைக்குதனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.வீ.விமலா, நில எடுப்பு சென்னை வெளிவட்டப்பாதை திட்டம்தனி வட்டாட்சியர் திருவள்ளூர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.

என்.நடராஜன் துணை வட்டாட்சியராக நீதியியல் பயிற்சி முடித்து தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது கும்மிடிப்பூண்டி நில எடுப்பு மாநெல்லூர் சிப்காட் அலகு 2-க்கு தனி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டார்.வி.சரண்யா துணை வட்டாட்சியர் கும்மிடிப்பூண்டி நில எடுப்பு மாநெல்லூர் சிப்காட் அலகு 1-க்கு தனி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டார்.

எஸ்,.சீனிவாசன் கிண்டி நில எடுப்பு டான்சிட்கோ தனி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டார்.எம்.வெங்கடேஷ் ஆவடி வட்டாட்சியர் நில எடுப்பு சென்னை எல்லை சாலை திட்டம் அலகு 3-க்கு தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.எம்.சதீஷ்குமார் சென்னை எல்லை சாலை திட்டம் அலகு 3 தனி வட்டாட்சியர் திருத்தணி தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கே.உமா, திருத்தணி தனி வட்டாட்சியர் திருமழிசை டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேளாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் பதவி உயர்வு மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணியிடத்தில் சேர வேண்டும். ஏதேனும் கால தாமதம் செய்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.