சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்ததைப் போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 46 டாஸ்மாக் கடைகள் கண்டறிந்து நிரந்தரமாக மூடப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் :

பதிவு:2023-06-22 21:57:55

திருவள்ளூர் ஜூன் 22 : தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 500 மது கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் ஜூன் 22 ஆம் தேதி முதல் (இன்று முதல்) மூடப்படும் கடைகளில் விற்பனை நடைபெறாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு மேற்கு என காக்களூர் மற்றும் திருமழிசை ஆகிய இரண்டு இடங்களில் குடோன்கள் அமைத்து மாவட்டத்தில் உள்ள மொத்தம் 350 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்தது போல் 46 கடைகள் திருவள்ளூர் கிழக்கு மேற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நிரந்தரமாக மூடப்பட்டது

அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், தலகாஞ்சேரி, டோல்கேட், கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள கடை என 4 கடைகள் உள்பட மாவட்ட முழுவதும் 46 கடைகள் மூடப்பட்டது. இரண்டு லட்சத்திற்கு குறைவில்லாமல் விற்பனையாகும் கடைகளில் ஒரு மேற்பார்வையாளர் மூன்று விற்பனையாளர் என நான்கு பேர் பணிபுரிந்து வந்தனர்.

தற்போது மூடப்பட்ட இந்த 46 கடைகளில் வேலை செய்து வந்த விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அடுத்ததாக என்ன செய்வது என்ற தகவல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மாற்று இடத்தில் வேலை வழங்கப்படுமா அல்லது புதிதாக ஏதேனும் கடைகள் திறந்து அங்கு பணி வழங்கப்படுமா என்பது மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களின் கேள்விக்குறியாக உள்ளது.