புட்லூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுகளால் 5 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம் : துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

பதிவு:2023-06-22 22:21:50



புட்லூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுகளால் 5 டன் டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம் : துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

புட்லூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுகளால் 5 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம் : துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூர் பெரிய ஏரி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியை நம்பி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் ஏரியில் வளர்க்கப்படும் மீன் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் பலமுறை புகார் அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து புட்லூர் ஊராட்சி அருகே உள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ள நிலையில் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன்கலந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் ஏரியை மீன் வளர்க்க 6 மாதங்களுக்கு முன்பு குத்தகை எடுத்து நஷ்டமடைந்ததாக ஏலதாரர் வேதனை தெரிவித்தார்.