பதிவு:2023-06-22 22:01:34
திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மருத்துவ கல்லூரி செல்லும் சாலை சந்திப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கிணங்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாதவரம் வி.மூர்த்தி,எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், வி.அலெக்ஸாண்டர், கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது திமுக மு க ஸ்டாலின் அரசின் மாபெரும் ஊழல் ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ,கஞ்சா விற்பனை ,கள்ளச்சாராய மரணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ,லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள பத்து ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யாததை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குப்பன், பொன் ராஜா, என்எஸ்ஏ மணிமாறன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் இன்பநாதன், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், பூண்டி மாதவன், திருவாலங்காடு சக்திவேல், பிரசாத், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, வேல்முருகன், எழிலரசன், ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் குமார்மாவட்ட ஆவின் தலைவர் சந்திரன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெயசேகர்பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.