திருவள்ளூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2023-06-27 23:27:06



திருவள்ளூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்  வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர்களால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளையும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற ஓவிய போட்டி, ரங்கோலி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

தொடர்ந்து நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நடைப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, துவக்கி வைத்தார். இப்பேரணியானது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது வழி நெடுகிலும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவியர்கள் கையில் ஏந்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வாசகங்களை உரக்கச் சொல்லி பேரணியில் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் இப்பேரணையில் விநியோகித்தனர். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, வழியனுப்பி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், உதவி ஆணையர் (கலால்) வி.மாலதி, மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, துணை ஆட்சியர் (பயிற்சி) சு.சுபலட்சுமி, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன், ஷெல்டர் நிறுவன பிரதிநிதி சாலமன், மாணவ,மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.