பதிவு:2023-06-27 23:32:18
திருவள்ளூரில் வேண்டாம் போதை விழிப்புணர்வு காணொளி அடங்கிய சிடியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுத்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
அதில் ஒரு பகுதியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் இணைந்து உருவாக்கிய வேண்டாம் போதை விழிப்புணர்வு காணொளி அடங்கிய சிடியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷந்தினி, ஷெல்டர் டிரஸ்ட் இயக்குநர் சாலமன் ராஜ், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.