பதிவு:2023-06-27 23:35:35
அரண்வாயிலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4000 மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் : கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூன் 27 : முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்கமாக, திருவள்ளூர் வட்டம், அரண்வாயில் பகுதியில் உள்ள யுனைடெட் பீரிவரீஷ் தொழிற்சாலை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் ஆலோசனையின் படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத்தை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் மஞ்சப்பைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4000 மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் துவக்கி வைத்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் மூலம் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் த.மணிமேகலை, உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன், யுனைடெட் பீரிவரீஷ் தொழிற்சாலை தலைமை அதிகாரி ஆர்.மகேஷ், தொழிற்சாலை நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.