பதிவு:2023-06-27 23:40:20
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிவில் நீதிபதி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் நம் மாவட்ட இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் ஒரு முன்னெடுப்பாக, "கற்போர் வட்டம்" என்னும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையங்களை மாவட்டம் முழுவதும் உருவாக்கியுள்ளது.
இம்மையம் மாணவர்களிடத்தில் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் தலைமை கற்போர் வட்டமும், 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், துணை வட்டங்களும், கிராமப்புற நூலங்களில் – கிளை கற்போர் வட்ட முனையம் என மூன்று கட்டமைப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 01.06.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சிவில் நீதிபதி பதவிக்கு 245 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை, அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்கள், மாவட்ட நீதித்துறையின் நடுவர்கள் மற்றும் நீதிபதிகள் கொண்டு வரும் திங்கள் கிழமை (26.06.2023) நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகள், மாவட்ட கற்போர் வட்ட மையத்தின் மூலமாக நேரடியாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஆன்லைன் மூலமாக இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள போட்டித் தேர்வர்கள் இது தொடர்பான விவரங்களை நேரில் அல்லது 7200134202 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.