பதிவு:2023-07-05 23:39:46
திருவள்ளூர் அடுத்த விஷ்ணு வாக்கத்தில் இரத்ததான முகாம்
திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் அடுத்த விஷ்ணுவாக்கத்தில் சென்னை சுற்றுவட்ட சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் பகுதியில் எல்என்டி நிறுவனர் ஹெண்ணிங்ஓக் லார்சனின் 116-வது பிறந்த நாள் விழாவை பாதுகாப்பு நாளாக கொண்டாடுவதை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது.ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் ராயல்ஸ் சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பிளட் சென்டர் சேர்மன் எம்.துக்காராம் தலைமை தாங்கினார்.
இதில் எல் அன்ட் டி நிறுவன நிர்வாகிகள் டி.மோகன்ராஜ், சத்யமூர்த்தி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் ராயல்ஸ் தலைவர் எஸ். சக்திகுமார், செயலாளர் சி.அருணாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பிரதீபா உள்பட 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.
இதில் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் ராயல்ஸ் நிர்வாகிகள் டாக்டர் என்.அபர்ணா, ஆர்.விஜய நாராயணன் ஏ.இ.சதீஷ்குமார் , கே.வி. சுரேஷ்குமார், சரிதா சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.