ஆட்சியர் அலுவலகம் முன்பு வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்களைக் கண்டறிந்து நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் முற்றுகைட்டு மனு

பதிவு:2023-07-05 23:41:10

திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்வாரியத்தில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்களைக் கண்டறிந்து நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைச்செயலாளர் இ.ரவி நேரில் அளித்தார்.அந்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வடசென்னை அனல் மின் நிலையம் 1இல் ஒப்பந்த ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்று பணிபுரிந்து வரும் பணியாளர்களை கண்டறிந்து நிரந்தரம் செய்வது, அடையாள அட்டை வழங்குவது,சம வேலைக்கு சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல தடவை கடிதம் அனுப்பியும், இயக்கம் நடத்தியும் எவ்விதமான தீர்வும் காணப்படவில்லை. இந்த தொழிலாளர்கள் சென்னையில் வெள்ளம், வர்தா, தானே, ஒக்கி போன்ற புயல்கள் மற்றும் கரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தடையின்றி மின் உற்பத்தி செய்து மின்வாரியத்திற்கும், அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழக திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத்துறையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என தெரிவித்திருந்தார்கள். அந்த அடிப்படையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விவரங்களை ஆட்சியர் என்ற முறையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வலியுறுத்தி அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு,மின்சார துறை அமைச்சருக்கு,மின்வாரிய தலைவருக்கு,மின்வாரிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும்,திமுக ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த பணியாளர்களைக் கண்டறிந்து நிரந்தரம் செய்வதாக தேர்தல் கூறிய படி தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் பிரதான கோரிக்கையை முன்வைத்தனர்.இதனால் அங்கு அரைமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.