திருவள்ளூர் மேற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா :

பதிவு:2022-05-02 23:34:04

திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம்,சென்னீர் குப்பத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் ஓ.பி.சி அணியின் மாநில தலைவர் ஜெ. லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலிவடைந்த 200 தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மாளிகைப் பொருட்கள் அடங்கிய நலதிட்ட உதவிகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து கலைமாமணி இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலை நிகழ்ச்சி நடத்தினார்.

இதில் மாவட்ட பொது செயலாளர் லயன் சீனிவாசன் கருணாகரன்,மாவட்ட பொருளாளர் மதுசூதனன்,மாவட்ட செயலாளர்கள் ஆர்யா சீனிவாசன்,மொரார்ஜி தேசாய், எஸ்.கே.மூர்த்தி, காஞ்சனா மற்றும் ஒன்றிய தலைவர் ராகேஷ்,சர்மா, கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளரும் இசையமைப்பாளருமான ராஜேஷ் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்.